முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிகா வைரஸ் பரவல்: அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதன்கிழமை, 3 ஜூலை 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடில்லி : ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும் படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே ஜிகா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக, மஹாராஷ்டிராவில் 2 கர்ப்பமான பெண்கள் உள்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும் படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., புனேவில் கர்ப்பினி பெண்கள் உட்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகள் அனைத்தையும் கண்காணித்து போதிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி 7 நாட்களுக்கு நீடித்தால், மக்கள் டாக்டரை அணுக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து