முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 இந்திய அணி இன்று காலை டெல்லி வருகை : உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு

புதன்கிழமை, 3 ஜூலை 2024      விளையாட்டு
INDIA 2024-06-17

Source: provided

பார்படாஸ் : பார்படாஸில் இருந்து இந்திய அணியினர் புதுதில்லிக்கு தனி விமானம் மூலம் நேற்று புறப்பட்டனர். இந்த விமானம் இன்று (ஜூலை 4) அதிகாலை தனி விமானம் மூலம் டெல்லி வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூறாவளியால்... 

கடந்த சனிக்கிழமை பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய வீரர்களை வரவேற்க ரசிகர்கள் தயாரான நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக இந்திய வீரர்கள் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பார்படாஸில் இருந்து நியூயார்க் வழியாக டெல்லி வரவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

தனி விமானத்தில்... 

இந்நிலையில், தற்போது வானிலை சீரானதை தொடர்ந்து, பிசிசிஐயின் ஏற்பாட்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் தனி விமானம் மூலம் பார்படாஸில் இருந்து புறப்பட்டுள்ளனர். இந்த விமானத்தில் இந்திய வீரர்கள், உதவி அலுவலர்கள் உள்பட 70 பேரும், பார்படாஸில் சிக்கிக் கொண்ட சில பத்திரிகையாளர்களும் பயணிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை டெல்லி வரும் இந்திய வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர். தொடர்ந்து, ஜூலை 5-ஆம் தேதி மும்பையில் பிரம்மாண்ட சாலை பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து