முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி-20 ஆல்ரவுண்டர் தரவரிசை: இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடத்துக்கு முன்னேறினார்

புதன்கிழமை, 3 ஜூலை 2024      விளையாட்டு
Hardick-pandya

Source: provided

துபாய் : சர்வதே கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட தரவுகளின்படி சர்வதே டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இரண்டு இடங்கள் முன்னேறி இலங்கையின் வனிந்து ஹசரங்காவுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்தியா வெற்றிக்கு...

உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோரின் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்தியதன் மூலம் ஐசிசி சர்வதேச போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ஹார்திக் பாண்டியா. முக்கியமான நேரங்களில் அசத்திய பாண்டியா 150 ஸ்ரைக்ரேட்டுடன் 144 ரன்களும், 11 விக்கெட்டுகளும் எடுத்தார்.

ஜஸ்பிரீத் பும்ரா...

மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், சிக்கந்தர் ராஸா, ஷகில் அல் ஹஸன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் ஒரு இடங்கள் முன்னேறி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 4 இடங்கள் சரிந்துள்ளார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா 12 இடங்கள் முன்னேறி 12 ஆவது இடத்தைப் பிடித்தார். உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்று இருந்தார் பும்ரா. 2020 ஆம் ஆண்டுக்கு பின் அவரது சிறந்த நிலை இதுவாகும்.

குல்தீப்-அர்ஸ்தீப் சிங்...

இந்திய வீரர் குல்தீப் யாதவ் முதல் பத்து இடங்களுக்கு நுழைந்துள்ளார். 3 இடங்கள் முன்னேறிய அவர் 8 இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அர்ஸ்தீப் சிங் 4 இடங்கள் முன்னேறி அவரது சிறந்த தரநிலையான 13 ஆவது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து