முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யூரோ கோப்பை போட்டி: ரொனால்டோ முக்கிய தகவல்

புதன்கிழமை, 3 ஜூலை 2024      விளையாட்டு
Ronaldo 2023 08 12

Source: provided

ரோம் : உலகின் முன்னணி கால்பந்து வீரராக போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ திகழ்ந்து வருகிறார். தற்போது யூரோ கோப்பையில் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி வருகிறார். போர்ச்சுக்கல் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

6-வது முறையாக... 

இதுதான் தன்னுடைய கடைசி யூரோ கோப்பை தொடர் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். ரொனால்டோ 6-வது முறையாக யூரோ கோப்பை தொடரில் விளையாடுகிறார். அடுத்த தொடர் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் நடைபெற இருக்கிறது. அப்போது ரொனோல்டாவுக்கு 43-வது வயதாகிவிடும். 

நான் உற்சாகம்...

"சந்தேகமின்றி இது எனக்கு கடைசி யூரோ. நிச்சயமாக இதுதான். ஆனால் அதைப்பற்றி நான் உணர்ச்சிவசப்படுவதில்லை. கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு இருக்கும் உற்சாகம், ரசிகர்களிடம் நான் காணும் உற்சாகம், எனது குடும்பம், மக்களின் ஆர்வம்... கால்பந்து உலகை விட்டு வெளியேறுவது அல்ல. நான் வெற்றி பெறுவதற்கு வேறு என்ன இருக்கிறது?. கால்பந்து பயணத்தில் நான் கொண்டுள்ள உற்சாம் காரணமாக இன்னும் இங்கே இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு போர்ச்சுக்கல் அணியில் அறிமுகம் ஆனார். 2016-ம் ஆண்டு இவரது தலைமையில் போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. போர்ச்சுக்கல் அணிக்காக 130 கோல்கள் அடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து