முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி வீரர்கள் பிரதமருடன் சந்திப்பு

புதன்கிழமை, 3 ஜூலை 2024      விளையாட்டு
INDIA 2024-06-21

Source: provided

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. சாதனை படைத்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்ப இருந்த நிலையில் பெரில் என்ற புயல் அவர்களை மேலும் 2 நாட்கள் பர்பட்டாசில் காக்க வைத்து விட்டது. இதனையடுத்து பர்பட்டாசில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று காலை 6 மணி அளவில் புது டெல்லியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பையுடன் இன்று தாயகம் திரும்பும் இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். காலை 11 மணி அளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக, ரசிகர்கள் படை சூட திறந்த வெளி பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் பயணிப்பார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பேரணி முடித்தபின் மும்பை வான்கடே மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ளது

_______________________________________________________________________________________________

ஜோகோவிச், ஸ்வரேவ் 2வது சுற்றுக்கு தகுதி

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், செக் குடியரசைச் சேர்ந்த விட் கோரிவா உடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸ், ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வரேவ் 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ராபர்டோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

_______________________________________________________________________________________________

ஆப்கானுக்கு எதிரான தொடர்: ஆஸி., கிரிக்கெட் வாரியம் ஓகே

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மனித உரிமைகள் மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரை மீண்டும் தொடங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆப்கானிஸ்தானுக்கு வாழ்த்துக்கள் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நிக் ஹாக்லி தெரிவித்தார்.

_______________________________________________________________________________________________

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பிரைன் லாரா புகழாரம்

கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் ஆன்டர்சன் சமகால கிரிக்கெட்டில் விளையாடும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவரது புள்ளிவிவரங்கள் அற்புதமானவை மற்றும் அவர் இங்கிலாந்துக்காக நிறைய செய்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது மனதில் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரது கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்கள் அப்படி நினைத்தால், அது அப்படியே இருக்கட்டும்.

அவர் இங்கிலாந்து அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும் அவர் தனது கடைசி போட்டியில் விளையாடுவதன் காரணமாக அலட்சியமாக இருப்பார் என நான் நினைக்கவில்லை. அவர் மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. என்னைப் பொறுத்தவரை உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளச்ர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான். என லாரா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து