முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? - வீடியோ மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

 சென்னை : டெல்லியில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: 

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கால் மக்கள் மன்றத்தில் இன்று நிற்கிறேன். லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வை பல்வேறு மாநில மக்கள் புறக்கணித்தனர். பா.ஜ.க.வை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்பட்டது. 

இண்டியா கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களை பழிவாங்குவதற்காகவே பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பா.ஜ.க. அரசு புறக்கணித்து வருகிறது. தொடர்ந்து தவறுகளை செய்து வந்தால், மேலும் தோல்வியை சந்திப்பீர்கள்.

மதுரை எய்ம்ஸ் திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஒரு சில மாநில கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பா.ஜ.க.வால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டத்தையும் பா.ஜ.க. அறிவிக்கவில்லை. தமிழகம் என்ற பெயரும் பட்ஜெட்டில் இல்லை.

பா.ஜ.க.வுக்கு திருவள்ளுவரும் கசந்து போய் விட்டார். நல்ல அரசு என்பது ஓட்டளிக்காத மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் வழங்காமல் ஓட்டுகளை மட்டும் பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

நாள்தோறும் திட்டங்கள், மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி என்பது தான் நமது திராவிட மாடல் அரசின் நோக்கம். கடந்தாண்டு 2 முறை புயல் தாக்கிய நிலையில் வெள்ள நிதியை வழங்காமல் பா.ஜ.க. அரசு ஏமாற்றியிருக்கிறது. 

தங்கள் சறுக்கலுக்கான காரணத்தை உணர்ந்து பா.ஜ.க. அரசு திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால் ஏமாற்றமே. மத்திய பா.ஜ.க. ஆட்சியில் நாற்காலியின் கால்களாக உள்ள மாநிலங்களுக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டி உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து