முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்று வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

கொலை வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை கவர்னர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது,  ஆயுள் தண்டனைக் கைதியை முன்கூட்டியே விடுவிக்க அரசின் பரிந்துரையை நிராகரித்ததற்கு எதிரான வழக்கில், கவர்னர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் எனவும் அதனை கவர்னர் மீற முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய சென்னை ஐகோர்ட்டு மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து