முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பரிந்துரை

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      இந்தியா
Sanjiv-Khanna-2024-10-17

புது டெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த  தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட்  பரிந்துரை செய்துள்ளார். 

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 10-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதையடுத்து அடுத்த  தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட்  பரிந்துரை செய்துள்ளார். 

இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சுப்ரீம் கோர்ட்டின் 51-வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்பார். சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நவம்பர் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று இப்பதவியில் 2025-ம் ஆண்டு மே மாதம் வரை அவர் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.  51-வது நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் சஞ்சீவ் கண்ணா கிட்டத்தட்ட 6 மாதங்கள் தலைமை நீதிபதி பொறுப்பை வகிப்பார்.

கடந்த 1960 -ம் ஆண்டு டெல்லியில் பிறந்த சஞ்சீவ் கண்னா, டெல்லி பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவர். இவரது தந்தை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக 1985-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரது தாயார் சரோஜ் கண்ணா, இந்தி பேராசிரியராக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணியாற்றினார். 

1983-ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார். 

கடந்த 2004-ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார். டெல்லி ஐகோர்ட்டில் பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் அவர் ஆஜராகியிருக்கிறார். டெல்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005-ம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார். 

 

கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எந்த ஒரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார் சஞ்சீவ் கண்ணா. இதற்கு முன்பாக ஒரு சில நீதிபதிகளே இப்படி பொறுப்பை வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து