முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு: ஆதாரங்கள் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புதல்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      உலகம்
Jastin Ruto 2023-09-19

ஒட்டாவா, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.

கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. 

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, ஆதாரங்களை அளிக்கும்படி கேட்டது. ஆனால் எந்த ஆதாரத்தையும் கனடா அளிக்கவில்லை. இதற்கிடையே இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது. 

இந்த நிலையில் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் ஜனநாயகத்தில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை ஆணையத்தில் கூறியதாவது:-

நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் தொடா்பு குறித்து உளவுத் தகவலின் அடிப்படையில் குற்றச்சாட்டை முன் வைத்தேன். இதன் விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பை எதிா்பாா்த்தோம். ஆனால், அவா்கள் தொடா்ந்து ஆதாரம் கோரி வந்தனா்.

ஆனால் நிஜ்ஜாா் கொலையில் இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க எங்களிடம் வலுவான ஆதாரமில்லை. முதன்மையாக உளவுத்துறையின் தகவல் மட்டுமே இருந்தது. எனவே இணைந்து பணியாற்றி ஆதாரத்தைக் கண்டறியலாம் என்று தெரிவித்தோம். அதற்கு இந்தியா சம்மதிக்கவில்லை. 

இந்தியாவில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது இப்பிரச்சனையை கனடா எழுப்பியிருக்க முடியும். ஆனால், அதை நாங்கள் தவிா்த்தோம். விசாரணைக்கு சிறிதும் ஒத்துழைக்காத இந்தியா, கனடா மீதான தாக்குதல்களைத் தொடா்ந்து வந்தது.

பிரதமா் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு கொண்ட கனடா நாட்டவர்கள் பற்றிய தகவல்களை இந்திய தூதர்கள் சேகரித்து இந்திய அரசு மற்றும் லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் போன்ற கிரிமினல் அமைப்புகளுக்கு அனுப்பினர். இதில் இந்தியா ஈடுபட்டு உள்ளது என்பதை மிகவும் தெளிவாகவும், நம்ப முடியாத அளவிற்கு தெளிவாகவும் கனடா உளவுத் துறை தெரிவித்தது. 

கனடா இறையான்மையை இந்தியா மீறியுள்ளது. கனடா மண்ணில் கனட நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜெண்டுகள் ஈடுபட்டுள்ளனர். இது தனது அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து