முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுடச்சுட பிரியாணி பரிமாறி தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      தமிழகம்
CM-1-2024-10-17

சென்னை, கொளத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி உண்டு மகிழ்ந்தார்.

சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அரசு நிர்வாகத்தை முடுக்கி விட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நகரின் பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தினார். கடந்த 15-ம் தேதி யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் நேற்று முன்தினம் கிண்டி ரேஸ் கிளப் பகுதி, வேளச்சேரி ஆறுகண் கல்வெட்டு வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மை பணியாளர்கள் மற்றும் முன் கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சென்னை வெள்ள பாதிப்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு முதல்வர்  பாராட்டு தெரிவித்தார். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட  உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து கொளத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி உண்டு மகிழ்ந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து