முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்து அணி அபார பந்துவீச்சு:46 ரன்களுக்கு ஆல்அவுடாகி இந்தியா மோசமான சாதனை

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      விளையாட்டு
17-Ram-50

Source: provided

பெங்களூரு: நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு இந்திய அமி ஆல்அவுடாகி மோசமான சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசி மேத் ஹென்றி 5 விக்கெட், வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட் , சவுதி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

3 போட்டிகள்... 

இந்தியாவுக்கு வந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அங்கு கன மழை பெய்தது. இதனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்தியா பேட்டிங்....

இந்த நிலையில், நேற்று 2வது நாள் ஆட்டம் தொடங்கி உள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த சர்பராஸ் கானும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

அடுத்தடுத்து அவுட்...

தொடர்ந்து ஜெய்ஸ்வால் , ரிஷப் பண்ட் ஆகியோர் சற்று நிலைத்து ஆடினர் , ஆனாலும் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து வந்த கே எல் ராகுல் , ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். மறுபுறம் சிறிது நேரம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசி மேத் ஹென்றி 5 விக்கெட், வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட் , சவுதி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதுவே முதல்முறை...

குறைந்த ரன்னில் ஆல் அவுட் ஆனதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மோசமாக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, ஆசிய மைதானங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி, 50 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 3வது குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது. அதேபோல, ஒரு இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் 5 பேர் டக் அவுட் ஆவது இது 4-வது முறையாகும். 

சொந்த மண்ணில்... 

நியூசிலாந்துக்கு எதிராக 2-வது முறையாக தற்போது 5 பேர் டக் அவுட் ஆகி உள்ளனர். இதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக 6 பேர் டக் அவுட் ஆகி இருந்தனர். பொதுவாக, சொந்த மண்ணில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி வெறும் 46 ரன்னில் ஆல் அவுட் ஆன சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் இருந்து இந்திய அணி எப்படி மீண்டு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கான்வே அரைசதம்... 

இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே- லாதம் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய லாதம் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். நீண்ட நேரமாக விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய நிலையில் ஜடேஜா பந்து வீச்சில் வில் யங் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் கான்வே 91 ரன்னில் வெளியேறினார்.

ஒரு விக்கெட் இழப்பு...

இதனையடுத்து ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. ரவீந்திரா 22 ரன்னிலும் மிட்செல் 14 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து