முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 லட்சம் பட்டதாரிகள் எழுதிய யு.ஜி.சி. நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      தமிழகம்
UGC-NET

சென்னை, உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. நெட் தேர்வின் முடிவுகள் இன்று 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 

பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பி.எச்.டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ) சார்பில் இத்தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) 2 முறை நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல் கட்ட நெட் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 19-ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால், இதில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. 

அதன் பின் யு.ஜி.சி நெட் மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் பட்டதாரிகள் வரை எழுதினர். 

தொடர்ந்து விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு தேர்வர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று 18-ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை  அறிவித்துள்ளது.

அதன்படி தேர்வு முடிவுகளை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவி மைய எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். மேலும், கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ எனும் வலைத் தளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை  தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து