முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு இந்திய அணி தகுதி பெறுமா...?

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      விளையாட்டு
17-Ram-52

Source: provided

மும்பை: நியூஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா தோற்றால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தகுதி பெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

46 ரன்களுக்கு.... 

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் 5 பேர் டக் அவுட் ஆகினர்.

முதலிடத்தில்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்திய அணிக்கு இன்னும் 8 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. அந்த 8 போட்டிகளில் நியூஸிலாந்துக்கு எதிராக உள்ள முதல் போட்டு உள்பட 5-ல் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழல் உள்ளது.

எந்தப் பாதிப்பும்... 

முதல் டெஸ்டில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வரும் இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலோ அல்லது டிரா செய்தாலோ மூன்றாவது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை இந்த டெஸ்ட் போட்டியின் மீதமுள்ள நாள்கள் மழையால் பாதிக்கப்பட்டு டிராவில் முடிந்தால், இந்திய அணி மீதமுள்ள 2 போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும்.

கவாஸ்கர் தொடரில்... 

மேலும், நியூஸிலாந்துக்கு எதிரானப் போட்டியில் 0-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவும் பட்சத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் 5-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும். இல்லையெனில் லீக் சுற்றுடன் வெளியேறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து