முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷேக் ஹசீனாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு: நவ. 18-க்குள் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      உலகம்
Sheick-Hasina

டாக்கா, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், நவம்பர் 18-ம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு தொடர்பாக, வங்கதேச மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். 

இதனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.  இந்நிலையில், 15 ஆண்டுகளாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது ஆட்சிக் காலத்தில், எதிர்க்கட்சி கட்சியை சேர்ந்தவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் ஜூலையிலிருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் அதிகப்படியான குற்றங்கள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் முகம்மத் தாஜூல் இஸ்லாம் கூறியதாவது,

ஹசீனா, நாட்டை விட்டு சென்றதிலிருந்து இங்குள்ள மக்களை சந்திக்கவில்லை. அவர்,இந்திய தலைநகர் டெல்லி அருகே, ராணுவ பகுதியில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இதனால் இந்திய, வங்கதேச அரசுகள் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

தற்போது வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் ஹசீனா மீதான வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரித்த நீதிமன்றம், ஹசீனாவை கைது செய்து நவம்பர் 18-ம் தேதிக்குள் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து