முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக அதிகரிப்பு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2024      தமிழகம்
Mettur Dam 2023-06-02

சேலம், காவிரி நீர்ப்பிடிப்பு பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அது போல் கர்நாடக- தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. 

இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 15-ம் தேதி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,531 கன அடியாக இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம்  காலை நீர்வரத்து 16,196 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 19,495 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.  

மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 92 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 93.35 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 56.56 டி.எம்.சி. உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து