முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: போலீஸ் எஸ்.ஐ. மகன் கைது

சனிக்கிழமை, 27 ஜூலை 2024      தமிழகம்
Armstrong 2024-07-03

சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டதன் பின்னணி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து நோட்டமிட்டு, அவர் சம்பவம் நடந்த பகுதிக்குள் வந்திருப்பதை, கொலை கும்பலுக்கு தெரிவித்து, வரவழைத்ததே பிரதீப்தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 வழக்குரைஞர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரெளடி சீசிங் ராஜா, சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரெளடி சம்பவம் செந்தில் ஆகிய 2 பேரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த வழக்குத் தொடர்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் நெருங்கிய உறவினர் பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப் (28) என்பவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படையினர் விசாரணை செய்தனர். விசாரணையின்போது, பிரதீப், ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்ட கொலையாளிகளுக்கு உதவியது தெரியவந்தது.

குற்றவாளிகளுக்கு உதவியது தெரியவந்ததையடுத்து போலீசார், பிரதீப்பை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர் ஊர்க் காவல் படையில் சிறிது காலம் பணியாற்றியவர் என்பதும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஒவ்வொரு நாளும் எங்கெங்குச் செல்வார் என்பதையும், அவரது அன்றாட நடவடிக்கைகளையும் நோட்டமிட்டு கொலையாளிகளுக்கு பிரதீப்தான் தகவல் தெரிவித்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதீப்பின் தந்தை திருநாவுக்கரசு சென்னை காவல்துறையின் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது அவரது இறுதி சடங்கு முழுவதும் பிரதீப் இருந்துள்ளார் என்பதும் காவல்துறையினர் தற்போது நடத்திய விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து