எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்த வலியுறுத்தி வரும் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை, மருத்துவமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, பொது மருத்துவப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது. என்றாலும், தலைக் காயங்களுக்கான சிகிச்சை பிரிவு இங்கு ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக, பரமக்குடி, இராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு தலைக்காயம் ஏற்பட்டால், காயமடைந்தவர்களை 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்லக்கூடிய அவல நிலை நிலவுகிறது. இதன் விளைவாக, தலைக் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க இயலாத நிலையில், உயிரிழப்புகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
புண்ணிய திருத்தலங்கள் அதிகம் நிறைந்துள்ள இராமநாதபுரம் பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்வதன் காரணமாக விபத்துகள் அதிகளவில் நடைபெறுவதால், இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தலைக் காய சிகிச்சை பிரிவினை ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமாகிறது. இது குறித்து இப்பகுதி மக்களின் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும், அதன்மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தலைக் காய சிகிச்சை பிரிவினை உடனடியாக அமைக்கவும், 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமிக்கப்படவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10-30 மணியளவில் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆர். தர்மர், எம்.பி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்5 days 10 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 3 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 6 days ago |
-
மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் : ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தகவல்
24 Sep 2024ஈரோடு : தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
-
வேலூர் மருத்துவமனையில் இருந்து மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்
24 Sep 2024வேலூர் : வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
-
அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
24 Sep 2024சென்னை : உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது
-
மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது : வரும் 30-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
24 Sep 2024சென்னை : கருணாநிதியின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், கவிஞர் மு.மேத்தா, பின்னணி பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வரும் 30-ம் த
-
மதுரை மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
24 Sep 2024மதுரை : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்லூரி முதல்வர், பொறியாளர் அறிக்கை தா
-
உடல் உறுப்பு தானம் செய்ய முதல்வர் ஸ்டாலின் பதிவு : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Sep 2024சென்னை : சென்னையில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளார் என்று அமைச்சர் மா.
-
கொளத்தூர் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Sep 2024சென்னை : கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் ஆ
-
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து: இயக்குநர் மோகன் ஜி கைது
24 Sep 2024திருச்சி : பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி-யை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்
24 Sep 2024சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் புழக்கத்தையும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் கட்டுப்படுத்தத் தவறிய
-
சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம்
24 Sep 2024சென்னை, சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளராக நீதிபதி அல்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
கான்பூர் சென்றது இந்திய அணி
24 Sep 2024இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
-
இஸ்ரேல் மீது 200 ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்
24 Sep 2024ஜெருசலேம், இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானப் படைத்தளம் , நாசரேத் நகரம், மஹிடோ விமானப் படைத்தளம், ஹைபா, அப்லா போன்ற நகரங்களை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு 200-க்கும் மேற்பட்
-
திருப்பதி லட்டு விவகாரம்: விசாரணை குழு அமைப்பு
24 Sep 2024அமராவதி : திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
போப் ஆண்டவருக்கு உடல்நலக் குறைவு: பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து
24 Sep 2024வாடிகன் சிட்டி, உடல்நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவரின் திட்டமிடப்பட்ட பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக வாடிகன் சிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவி
-
இந்தியா-ஆஸி. பாக்ஸிங் டே டெஸ்ட்: 3 மடங்கு அதிகம் விற்ற டிக்கெட்
24 Sep 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
-
முதல்வர் சித்தராமையா ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை: டி.கே.சிவக்குமார் பதில்
24 Sep 2024பெங்களூரு, ஐகோர்ட் உத்தரவை அடுத்து முதல்வர் சித்தராமையா ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
-
இலங்கையின் 16-வது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு
24 Sep 2024கொழும்பு, இலங்கையின் 16-வது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். அவருக்கு அதிபர் அனுரா திசநாயகே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-
காசாவில் போர் நிறுத்தம்: பிரதமர் மோடி வேண்டுகோள்
24 Sep 2024புதுடெல்லி : காசாவில் போர் நிறுத்தம் செய்யவும், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
லட்டு குறித்து கருத்து: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் கார்த்தி
24 Sep 2024சென்னை, லட்டு குறித்து தெரிவித்த கருத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி.
-
தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் சுட்டுக்கொலை
24 Sep 2024சென்னை, தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
-
மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார்
24 Sep 2024சென்னை : தனது உடமைகளை மீட்டு கொடுக்குமாறு மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் ஜெயம் ரவி புகார் அளித்திருக்கிறார்.
-
சந்திரபாபு நாயுடுவை விமர்சித்த திருப்பதி முன்னாள் தேவஸ்தான தலைவர் மீது வழக்குப்பதிவு
24 Sep 2024திருப்பதி : முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்ச்சித்த திருப்பதி கோவில் முன்னாள் தேவஸ்தான தலைவர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-09-2024.
24 Sep 2024 -
மூடா வழக்கு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி
24 Sep 2024பெங்களூரு, நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிக்கை
24 Sep 2024பெங்களூரு, நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.