முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மருத்துவமனையில் இருந்து மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ்

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      தமிழகம்
Durai-Dayanidhi 2024-03-24

Source: provided

வேலூர் : வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதிக்கு புனர்வாழ்வு பயிற்சிக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த மார்ச் 14-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிகிச்சையுடன், புனர்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதியை சி.எம்.சி. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த மாதம் 26-ம் தேதி  மக்களவை உறுப்பினரான கனிமொழி, துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். 

இந்நிலையில், சி.எம்.சி. மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி நேற்று  காலை 10.30 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மற்றும் குடும்பத்தினர் துரை தயாநிதியை அழைத்துச் சென்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து