முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கான்பூர் சென்றது இந்திய அணி

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2024      விளையாட்டு
Indian-team 2024-02-06

Source: provided

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 27-ம் தேதி கான்பூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் , 2-வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் இன்று கான்பூர் சென்றடைந்தனர். இன்று முதல் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

_______________________________________________________

உலகக்கோப்பை பாடல் வெளியீடு 

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில், இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. பிரபல பாடகிகள் ரியா துகால், சிம்ரன் துகால், ஸோ சித்தார்த், சுசிதா ஷர்க் ஆகியோர் அடங்கிய 'WISH' மகளிர் இசைக்குழுவினர் 'வாட்எவர் இட் டேக்ஸ்' என்ற இந்த பாடலை பாடியுள்ளனர். பே மியூசிக் சவுத் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பாடலுக்கு பார்த் பரேக் இசையமைக்க, மிக்கி மெக்லியாரி இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பத்தின் வீடியோவும் யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

_______________________________________________________

தொடரை வென்றது ஆஸி., 

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலேயே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அமெலியா கெர் 4 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக சுதர்லேண்ட் மற்றும் வாரிஹாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 36 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 33 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து ஆஸ்திரேலியா அசத்தியுள்ளது. 

_______________________________________________________

பிரக்ஞானந்தாவுக்கு வரவேற்பு

ஹங்கேரியில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட்டில், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் அணி தங்கப்பதக்கங்களை வென்றன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் தமிழகத்தை சேர்ந்த அக்கா, தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினர். இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோர் சென்னைக்கு திரும்பினர். அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

_______________________________________________________

'லப்பர் பந்து' படத்திற்கு பாராட்டு

லப்பர் பந்து படத்தை பாராட்டி இந்திய வீரர் அஷ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "இது ஒரு திரைப்படத்தை பற்றியது. திரைப்படம் எடுப்பது என்பது ஒரு சீரியசான விஷயம். அதில் நிறைய கடின உழைப்பும், கிரியேட்டிவிட்டியும் இருக்கிறது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அதில் இருக்கும் பாசிட்டிவ் அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிக குறைந்த நெகட்டிவ் விஷயங்ளை மட்டுமே நான் பேசுவேன். ஆனால், நேற்று பல வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு திரைப்படத்தை ரசித்தேன் என்பதையும், சமீபத்திய ஸ்போர்ட்ஸ் படங்களில் பின்பற்றப்படும் கிளிஷேக்களை தாண்டி ஒரு திரைப்படத்தை எவ்வளவு நம்பகத்தன்மையுடன் உருவாக்க முடியும் என்பதற்கான பாடம் இது என்பதையும் என்னால் சொல்லாமல் தவிர்க்க முடியவில்லை.

பொதுவாக கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ்ப் படங்களில் அதன் கதைக்கருவை விட்டுவிட்டு அவர்கள் சொல்ல நினைக்கும் விஷயங்களைதான் சொல்வார்கள். 'லப்பர் பந்து' படத்தில் அப்படி ஏதும் இல்லாததால் இது எனக்கு ஸ்பெஷலாக தோன்றியது. மிகவும் நம்பகத்தன்மையுடன், உண்மைக்கு நெருக்கமான இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் கூட தேவையற்றதாக தெரியவில்லை. இயக்குநரும் ஒட்டுமொத்த படக்குழுவும், குறிப்பாக ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா, ஸ்வாசிகா, காளி வெங்கட் மற்றும் பாலா ஆகியோர் மிகச்சிறப்பான ஒரு படத்தை தந்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

_______________________________________________________

வேகப் பந்துவீச்சாளர் விலகல்

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. முதல் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இலங்கை வேகப் பந்துவீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோ காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் விஸ்வா ஃபெர்னாண்டோவுக்கு பயிற்சியின்போது, காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக அணியில் வலதுகை ஆஃப் ஸ்பின்னரான நிஷான் பெய்ரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை அணி 50 சதவிகித வெற்றிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 42.86 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி 4-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து