முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் கட்சியை தடுத்து நிறுத்துகிறோமா? மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      தமிழகம்
EVa-Velu 2023 04 01

Source: provided

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல. அரசியல் கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழர்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக திமுக பாடுபட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக தொடங்கப்படவில்லை. தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சியாகும்,” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு துறை சார்ந்த அதிகாரிகளுடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை நேற்று (செப்.5) நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “திராவிட மாடல் ஆட்சியில் தென் தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ரூ.515 கோடி மதிப்பில் 212 நெடுஞ்சாலைகளில் 281 கிலோ மீட்டருக்கு சாலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, அதில் 200 பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும்.

நடப்பு ஆண்டில் ரூ.111 கோடி மதிப்பில் 30 சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. மக்களுக்கான திட்டங்களில் முதல்வர் அதிமுக, திமுக என பிரித்துப்பார்க்க மாட்டார். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மதுரை அப்பலோ மேம்பாலப் பணிகள் 30 சதவீதமும், மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் 15 சதவீதமும் முடிவுற்றுள்ளது.

நடிகர் விஜய்யின் கட்சி மற்றும் அவர் நடித்த படத்தை திமுக தடுக்க முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போது அமைச்சர் உதயநிதி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல. அரசியல் கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழர்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக திமுக பாடுபட்டு வருகிறது.

ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக தொடங்கப்படவில்லை. தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சியாகும். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. சில கட்சிகள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போயிருக்கிறது. ஆகவே நாங்கள் யாரையும் கண்டு பொறாமை கொள்ளமாட்டோம் அவர்களை தடுக்க மாட்டோம். முடிந்தால் வாழ்த்து சொல்வோம்  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து