முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் போட்டிகளில் இங்கி. வீரர் ரஷித் சாதனை

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      விளையாட்டு
England 2024-05-14

Source: provided

லீட்ஸ் : ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

270 ரன்களுக்கு... 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 74 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 60 ரன்களும் குவித்தனர்.

200 விக்கெட்டுகள்...

இந்த போட்டியில் இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத் மற்றும் ஜேக்கோப் பெத்தெல் தலா 2 விக்கெட்டுகளையும், ஆலி ஸ்டோன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். நேற்றைய போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், அடில் ரஷித் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். 

முதல் இங்கி. வீரர்...

இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவரையேச் சேரும். அடில் ரஷித்துக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 200-க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டேரன் காஹ் முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து