Idhayam Matrimony

பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை: மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      இந்தியா
Manipur 2024-10-07

Source: provided

இம்பால் : மணிப்பூரின் கச்சிங் மற்றும் தவுபல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "(அக்.5) மணிப்பூரின் கச்சிங் மாவட்டத்தின் வபாகாய் நேட்காங் டுரென்மெய் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று நாட்டு துப்பாக்கி, ஒரு ஏர் கன் ரைபிள், 9 மி.மீ. பிஸ்டல், இரண்டு துப்பாக்கிகள், டெட்டனேட்டர்கள் இல்லாத 14 கையெறி குண்டுகள், 51 மிமீ மோட்டார் ஒன்று, 3ம் ரக எம்.கே கையெறி குண்டுகள் இரண்டு, 4.755 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.

அதேபோல, மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் உள்ள சிங்காம் சிங் பகுதியில் நேற்று பாதுகாப்புப்படையினர் நடத்திய மற்றொரு நடவடிக்கையின் போது, எஸ்.எம்.ஜி. ரக நாட்டு துப்பாக்கி ஒன்று, 32 பிஸ்டல் ஆகியவற்றை கைப்பற்றினர்.மேலும் ஒரு 81 மிமீ மோட்டார் ஷெல், நான்கு கையெறி குண்டுகள், மூன்று டெட்டனேட்டர்கள், வெடிமருந்துகள், ஐந்து எறிகுண்டுகள், ஏழு கண்ணீர் புகை குண்டுகள், 11 கண்ணீர் புகை குண்டுகள், இரண்டு சாதாரண குண்டுகள் கைப்பற்றப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து