Idhayam Matrimony

பணமோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      இந்தியா
ED 2024-10-07

Source: provided

ஜலந்தர் : பணமோசடி வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஆதாரங்களின் படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ நிலமோசடி தொடர்புடைய வழக்கில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அரோராவுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். 

இதுகுறித்து ஆம் ஆத்மி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். இந்த சோதனைகள் என்ன காரணத்தினால் நடத்தப்படுகின்றன என்று உறுதியாக தெரியவில்லை. அமலாக்கத் துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, தங்கள் கட்சியின் எம்.பி. மீதான இந்தச் சோதனை தங்களின் கட்சியை உடைக்கும் முயற்சி என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சீவ் அரோராவின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் (அமலாக்கத் துறையினர்) அரவிந்த் கேஜ்ரிவால் வீடு, என்னுடைய வீடு, சஞ்சய் சிங் வீடு, சத்தியேந்திர ஜெயன் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், எங்கேயும் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

ஆனால், மோடியின் ஏஜென்ஸிகள் ஒன்றன் பின் ஒன்றாக போலி வழக்குகளை போடுவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியை உடைப்பதற்காக அவர்கள் எந்த அளவுக்கும் செல்வார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு முயன்றாலும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள், விலைபோக மாட்டார்கள், அஞ்சமாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து