முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் நிகழ்ந்த விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      இந்தியா
Rajasthan 2024-10-20

Source: provided

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் பஸ்சும், டெம்போவும் மோதிக் கொண்ட விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.  

குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஸ்லீப்பர் கோச் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டு இருந்தது. சுமிபூர் அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் இர்பான் என்கிற பூந்தி, அவரது மனைவி ஜூலி  மற்றும் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  

உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் அதிக வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து