முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மாரத்தான் போட்டி: பயிற்சி ஏதுமின்றி 21 கி.மீ. ஓடி சாதனை படைத்த முதல்வர் உமர் அப்துல்லா

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2024      இந்தியா
Umar-Abdullah 2024-10-20

Source: provided

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நடந்த  மாரத்தான் போட்டியில் பயிற்சி ஏதுமின்றி அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா 21 கி.மீ. தூரம் ஓடி  வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள வீரர்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். 

மாரத்தான் போட்டியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் அவர் அரை மாரத்தானில் பங்கேற்றார். பயிற்சி எதுவும் இன்றி ஓடத் தொடங்கிய அவர், கிலோ மீட்டருக்கு 5 நிமிடங்கள் 54 வினாடிகள் என்ற சராசரி வேகத்தில் 21 கி.மீ. ஓடி வரலாற்று சாதனை படைத்தார்.

இந்த சாதனையை அடைந்தது பெருமை அளிப்பதாக கூறிய அவர், இதற்கு முன்பு 13 கி.மீ.க்கு மேல் ஓடவில்லை என்றும் கூறினார். முதல்வர்உமர் அப்துல்லா மாரத்தானில் பங்கேற்று ஓடும்போது, அவரது குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்தனர். 

இதுதொடர்பாக உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பக்கத்தில்  புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.  மாரத்தானில் மற்றவர்களுடன் ஓடுவது மிகவும் வேடிக்கையாக இருந்தது. வழியில் நிறைய செல்பிகள், வீடியோக்கள் எடுத்தனர். 

என்னை சந்திப்பதற்கான சில கோரிக்கைகள், வேலை தொடர்பான சில கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. சில செய்தியாளர்கள் ஓடிக் கொண்டே பேட்டி எடுக்கவும் முயன்றனர். மகிழ்ச்சியாக இருக்கவோ, மன அழுத்தத்தை வெல்லவோ உங்களுக்கு போதைப்பொருட்கள் தேவையில்லை.

ஒரு கிலோ மீட்டர் ஓடுவதோ அல்லது மாரத்தானில் பங்கேற்று ஓடுவதோ நல்லது. இயற்கையான மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அடைய இது போதும். முயற்சி செய்யுங்கள். போதைப்பொருள் இல்லாத ஜம்மு காஷ்மீருக்காக ஓடத் தொடங்குவோம். இவ்வாறு அந்த பதிவில் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து