முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய அளவில் டிரெண்டிங்: த.வெ.க., மாநாடு முதலிடம்

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      தமிழகம்
Vijay-1 2024-10-26

Source: provided

சென்னை : தேசிய அளவில் எக்ஸ் வலைதளத்தில் விஜயின் த.வெ.க., மாநாடு முதலிடத்தில் டிரெண்டிங் ஆகியது.

அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன சிலர் வரவில்லை. வந்த சிலரும் நடப்புக்கால அரசியல் காற்றில் பறந்துவிட்டனர் அல்லது கரைந்தே போய்விட்டனர். அதற்கு உதாரணங்கள் பல இருந்தாலும் அதை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நேற்றைய தினம் கிட்டத்தட்ட எல்லோரும் நடிகர் விஜய் தொடங்கிய த.வெ.க., கட்சியின் முதல் மாநாட்டை உச்சி முகர பேச ஆரம்பித்துவிட்டனர்.

எதிர்பாராத தருணங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். அப்படித்தான் நேற்று விஜய் கட்சி மாநாடு தொடங்கும் முன்னே சமூக வலைதளங்களில் லேசாக எட்டி பார்த்தது தமிழக வெற்றிக்கழகம் என்னும் பெயர். நேற்று காலை எக்ஸ் வலை தளத்தில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்தது.

பின்னர் நேரம் நகர, நகர மெல்ல அடுத்த 5 இடங்களுக்குள் நுழைந்த தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயர் டிரெண்டிங்கில் வேகம் எடுத்து முன்னே செல்ல ஆரம்பித்தது. கடந்த 3 மணி நேரத்துக்கும் மேலாக, தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயர் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதுவரை காணாத படை, இது வெற்றி படை, யாரும் கண்டிராத மாபெரும் எழுச்சி என்று இஷ்டம் போல த.வெ.க., தொண்டர்கள் மாஸாக வலம் வரும் போட்டோக்கள், வீடியோக்கள் டிரெண்டிங்காகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்ட போது எடுத்த வீடியோக்கள், வரும் வழியில் கண்ணில் தென்பட்டவை, யார், யார் எல்லாம் மாநாட்டுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர் என யூடியூபராக மாறி தொண்டர்கள் கலக்கி தள்ளி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து