முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய்க்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 27 அக்டோபர் 2024      தமிழகம்
Vijay Seupathi 2024-06-

Source: provided

சென்னை : தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு தமிழ் திரையுலக நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்தப் பேட்டியில், அரசியல் என்பது கட் அவுட் வைப்பது அல்ல, கருத்தியலே அரசியல். நீங்கள் வேலுநாச்சியார், அம்பேத்கர் ஆகியோரை கட் அவுட்டில் வைப்பது முக்கியமில்லை. அவர்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கூட்டணி குறித்து தம்பி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு கூறுகையில், விஜய் தைரியமாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.  அவருக்கு இறைவன் அருள் உள்ளது. விஜய்க்கு எனது முழு ஆதரவு எப்போதும் உண்டு. அதைப்போல என்னுடைய தந்தை ஆசியும் அவருக்கு உண்டு. ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசிர்வதிக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில்,  இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல்வாழ்த்துகள் விஜய் சார் என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். 

திரைப்பட இயக்குனர் நெல்சன் கூறுகையில், என் மனமார்ந்த வாழ்த்துகள் விஜய் சார்.இன்று உங்கள் புதிய தொடக்கத்திற்கு என்று தெரிவித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி, த.வெ.க. கட்சியின் மாநாட்டுக்கு விஜய் அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். திரையுலகில் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்தப் புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க, தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு வாழ்த்துகள் என்றும், நடிகை தன்ஷிகா, தமிழக வெற்றிக்கழகம் மாற்றத்தை எதிர்பார்த்து வாழ்த்துகிறோம் விஜய் சார் என்றும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சிபிராஜ் கூறுகையில், த.வெ.க. கட்சியின் முதல் மாநாட்டுக்கு விஜய் அண்ணாவுக்கு எனது வாழ்த்துகள். அவருடைய பேச்சை எதிர்நோக்கி இருக்கிறேன். அவரது புதிய பயணம் அவருக்கு வெற்றியை தரட்டும் என்று தெரிவித்துள்ளார். நடிகர் அஸ்வத் மாரிமுத்து கூறுகையில், என் நெஞ்சில் குடியிருக்கும் என்று நீங்கள் இன்று கூறியவுடன் அலறப்போகும் தமிழகத்தை காண காத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். வாழ்த்துகள் விஜய் சார் என்றும்  தெரிவித்துள்ளார்.  

இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், பிரம்மாண்ட கூட்டத்துடன் பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பமாக இருக்கும் ‘தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும், ஆர்.ஜே.பாலாஜி, அன்புள்ள விஜய் சார், சினிமாவை விட்டுவிட்டு தேர்தல் அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய முடிவு. உங்களின் மிகப் பெரிய பயணம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து