முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவர் மீது கத்திக்குத்து: அரசு மருத்துவர் விளக்கம்

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      தமிழகம்
Doter 2024 11 13

Source: provided

சென்னை : சென்னையை அடுத்த கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அரசு மருத்துவர் மீது, கத்திக்குத்துச் சம்பவம் நடந்தது ஏன் என்பது குறித்து அரசு மருத்துவர் விளக்ம் அளித்துள்ளார்.

தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்காததால்தான், இளைஞர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறதே என்று செய்தியாளர் கேட்டதற்கு, மருத்துவமனை மருத்துவர் கூறியதாவது, புற்றுநோய் என்பது எவ்வளவு விரைவாகக் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு அதிகமாக சிகிச்சை அளித்து குணப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. வரும்போதே முற்றிய நிலையில் இருந்தால்தான், மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சையே அளிக்கப்படும். ஆரம்பக்கட்டத்தில் வந்திருந்தால், மருத்துவமனையில் அறுவைசிகிச்சை அளித்து குணப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால், கத்தியால் குத்தியவரின் தாய், மருத்துவமனைக்கு வரும்போதே, புற்றுநோய் முற்றிய நிலையில், மற்ற உடல்பாகங்களுக்குப் பரவிய நிலையில்தான் வந்தார். அதனால்தான் அவருக்கு கீமோதெரபி கொடுக்கப்பட்டது. கீமோதெரபி கொடுத்தாலுமே புற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அந்தமாதிரி இருக்கும்நிலையில்தான் அவருக்கு புற்றுநோய் நுரையீரல் வரை பரவியிருப்பதாக மருத்துவர் கூறியிருக்கிறார்.

இந்தநிலையில்தான், தொடர்ந்து சிகிச்சை வேண்டாம் என்று நோயாளியும், அவரது மகனும் தாங்களாக மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், தாய்க்கு சிகிச்சையளித்த மருத்துவரை, விக்னேஷ் கத்தியால் குத்தியிருக்கிறார். ஆனால், புற்றுநோய்க்கு நூறு சதவீதம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என்பது உத்தரவாதம் இல்லை. புற்றுநோய் பரவியிருக்கும் தன்மையைப் பொருத்துத்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்பக்கட்டத்திலேயே வந்தால்தான் சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளியின் உறவினர் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, மருத்துவமனைக்கு வந்த ஒரு இளைஞர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தியிருக்கிறார்.

அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து