முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பகுதிகளில் கடந்தாண்டு 38 பேர் பலி : உள்துறை அமைச்சகம் விளக்கம்

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      இந்தியா
Manipur 2024 11 13

Source: provided

புதுடெல்லி : வடகிழக்கு பகுதிகளில் கடந்தாண்டு வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் 38 பேர் என்று  உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்தாண்டு நிகழ்ந்த வெவ்வேறு வன்முறைச் சம்பவங்களில் 38 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சக நிலைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளது.

மணிப்பூரில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அரங்கேறி வரும் பல்வேறு வன்முறை சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 60,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் பலர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அமைதியை நிலைநாட்ட பல்வேறு மத்திய பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற விவாதங்களின்போது மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு பதில்களில், கடந்தாண்டு மே. 3 முதல் டிச. 31 வரையிலான காலகட்டத்தில், மணிப்பூரில் வன்முறை சம்பவங்களில் சுமார் 160 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மத்திய அரசின் மேற்கண்ட அறிக்கையில் மணிப்பூர் நிலவரத்தை குறித்து தரவுகளை இணைக்காமல் விடுபட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. உள்துறை அமைச்சக செயலர் கோவிந்த் மோகன் தலைமையிலான உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த 46 அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, வடகிழக்குப் பிராந்தியங்களில் வன்முறைச் சம்பவங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு 212 பேர் கொல்லப்பட்டதாகவும், 2023-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 38 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பிராந்தியங்களில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுடன் ஒப்பிடுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் 2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வன்முறைச் சம்பவங்களில் மக்கள் உயிரிழப்பு 82 சதவீதம் அளவுக்கு, வெகுவாகக் குறைந்திருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கையும் 824-இல் இருந்து(2014-ஆம் ஆண்டு), கடந்தாண்டு 243-ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளைச் சார்ந்தோரின் மரணங்கள் 20-இல்(2014-ஆம் ஆண்டு), இருந்து கடந்தாண்டு 8-ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து