முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

47-வது பிறந்த நாள்: துணை முதல்வர் உதயநிதிக்கு திருமா, கமல்ஹாசன் வாழ்த்து

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-11-02

சென்னை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார்.  இதனையொட்டி ஏராளமானோர் அதிகாலை முதலே அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்,  தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய்த் திகழும் துணை முதல்வர், என் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில்,  பிறந்தநாள் காணும் துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். திராவிடம், தமிழ்த்தேசியம் வேறு வேறு அல்ல, திராவிடம் தமிழ்த் தேசியத்தின் வேர் என்பதை நிலைநாட்ட, இன்று தங்களின் பங்களிப்பு காலத்தின் தேவையாகி் உள்ளது. கலைஞரின் கருத்தியல் பெயரனாய்க் களமாட, ஊடுருவும் சனாதனப் பகை வெல்ல உளங்கனிந்த நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து