முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கர் விவகாரத்தில் நாடகமாடும் காங். கட்சி பிரதமர் போடி விமனர்சனம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      இந்தியா
Modi -2024-07-02

Source: provided

டெல்லி: பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். அவையிலும் எம்.பிக்கள் ஜெய் பீம் கோஷம் எழுப்பியதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு பிரதமர் மோடி  பதில்  அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, காங்கிரசும் அதன் அழுகிய கட்டமைப்பும் தங்கள் தீய பொய்களால் பல ஆண்டுகளாகத் தங்கள் தவறுகளை மறைக்க நினைக்கிறார்கள். குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் விவகாரத்தில் நாடகமாடுகிறார்கள். அம்பேத்கரை அவமதித்ததை, இந்த பொய்கள் மூலம் மறைக்க முடியும் என்று அவர்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறான நினைப்பு.

ஒரு குடும்பத்தின் தலைமையில் ஒரு கட்சி, டாக்டர் அம்பேத்கரின் மரபை அழிக்கவும், எஸ்.சி./எஸ்.டி. சமூகங்களை அவமானப்படுத்தவும் சாத்தியமான அனைத்து மோசமான தந்திரங்களிலும் ஈடுபடுவதை இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து