முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியேட்டர் நெரிசல் சம்பவத்தில் தாய் இறந்த நிலையில் மகனும் மூளைச்சாவு

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      இந்தியா
00

Source: provided

ஐதராபாத்: புஷ்பா 2 படம் வெளியான திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில், இயக்குநர் சுகுமார் கைவண்ணத்தில் உருவான புஷ்பா 2 என்ற படம் அண்மையில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. அண்மையில் புஷ்பா 2 படம் வெளியான தியேட்டர் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் படக்குழுவினருடன் பிரிமியர் ஷோவுக்கு வந்தபோது பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண், தமது 9 வயது மகனுடன் கூட்டத்தில் சிக்கினார். ரேவதி உயிரிழந்துவிட, மகன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பெரும் பரபரப்பான இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் ஜாமீனில் விடப்பட்டார். இந் நிலையில் இந்த சம்பவத்தின் அடுத்த அதிர்ச்சியாக சிகிச்சையில் இருந்த 9 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறுவன் சேர்க்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஆனந்த், தெலுங்கானா சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டியானா உள்ளிட்டோர் சென்றனர். அங்கு சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவக்குழுவிடம் பேசினர்.

பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது; சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டார். கூட்ட நெரிசலில் சிக்கிய அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது. எனவே அவர் குணம் அடைய நீண்ட காலம் பிடிக்கும். சிறுவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். விரைவில் இதுகுறித்த விரிவான அறிக்கையை அவர்கள் வெளியிடுவார்கள். செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிறுவன் மருத்துவமனையில் உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் ஏற்கனவே சிக்கலில் உள்ள நிலையில் சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது பெரும் நெருக்கடி ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து