முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கேரம் சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      தமிழகம்      விளையாட்டு
Udhayanidhi-2024-12-18

சென்னை, உலக கேரம் சாம்பியனான காசிமாவுக்கு ரூ. 1 கோடி ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர். சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், கேரம் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தமிழக அரசு எந்த ஊக்கத்தொகையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கேரம் சாம்பியன் காசிமாவின் தந்தை தமிழக அரசு தனது மகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்காததில் வருத்தம் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. குழு போட்டியில் தங்கம் வென்ற நாகஜோதிக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரட்டையர் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கும் ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேரம் விளையாட்டு வீராங்கனை காசிமாவிடம் ரூ.1 கோடிக்கான காசோலையயை துணை முதல்வர் வழங்கினார். அதுபோல் இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையை அவர் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து