முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக்குழுவுக்கு காங். சார்பில் பிரியங்கா பெயர் பரிந்துரை

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      இந்தியா
Priyanka-Gandhi-12023-06-08

Source: provided

டெல்லி : பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்காவை காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்யவுள்ள பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்கா காந்தியை காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது. மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். 

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க., சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வாக்கெடுப்பு மூலம் மசோதாவை தாக்கல் செய்தது மத்திய அரசு. தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதாவை அனுப்புவதாக மத்திய அமைச்சர் அறிவித்தார். ஆனால், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இறுதி முடிவை இதுவரை வெளியிடவில்லை.

பா.ஜ.க.வால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை எப்படி மசோதாவை நிறைவேற்றுவார்கள்? காங்கிரஸ் நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடர் வருகின்ற நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே கூட்டுக்குழு உறுப்பினர்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம் 31 பேர் கொண்ட குழுவில் 21 பேர் மக்களவையில் இருந்தும் 10 பேர் மாநிலங்களவையில் இருந்தும் இடம்பெறவுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் பிரியங்கா காந்தி, மனீஷ் திவார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சுக்தேவ் பகத் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரை கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளனர். திரிணமூலில் இருந்து கல்யாண் பானர்ஜி, தி.மு.க.வில் இருந்து நெல்சன், சமாஜவாதியில் இருந்து தர்மேந்திர யாதவ் ஆகியோர் கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரியங்கா காந்தி வயநாடு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக கூட்டுக்குழுவில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து