முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      விளையாட்டு
India 2024-01-29

Source: provided

பிரிஸ்பேன் : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.  

சுற்றுப்பயணம்... 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வந்தது. மழையால் பாதிப்புக்கு உள்ளான இந்த ஆட்டம் நேற்று டிராவில் முடிந்தது. 

2-வது போட்டியில்... 

இந்த தொடரில் அஸ்வின் 2-வது போட்டியில் மட்டுமே விளையாடினார். முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அஸ்வின் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியே அஸ்வினின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

ஓய்வு பெறுவதாக... 

பிரிஸ்பேன் போட்டி டிராவில் முடிந்த உடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். 

ஜெய் ஷா வாழ்த்து...

ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் அஷ்வினுக்கு ஐசிசி தலைவரான ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "தன்னுடைய சுழற்பந்து வீச்சு மூலமும் கிரிக்கெட் விளையாட்டை பற்றிய சிறந்த அறிவாலும் இந்திய அணியின் மிகசிறந்த மேட்ச் வின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். பெருமைப்பட வேண்டிய சர்வதேச கிரிக்கெட்டை அவர் விளையாடியுள்ளார். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

உறுதியாக இருந்தார்: ரோகித் 

அஸ்வின் ஓய்வு குறித்து ரோகித் சர்மா கூறியதாவது., முதல் போட்டியின் போதே இந்த முடிவில் அவர் உறுதியாக இருந்தார். இந்திய அணி என்ன சிந்திக்கிறது எந்த கலவையை விரும்புகிறது என்பதை அஸ்வின் புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் எந்த ஸ்பின்னர் விளையாடுவார் என்பது சூழ்நிலை காரணமாக எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.கிரிக்கெட்டுக்கு அவர் குட் பை சொல்லியிருக்கலாம். அடுத்தப் போட்டியில் எந்த ஸ்பின்னர் தேவை என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. இருப்பினும் அஸ்வின் எடுக்கும் முடிவுக்கு மரியாதை கொடுத்து நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பது அவசியம் என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து