முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா அருகே வானாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 14 பேர் பலி

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      உலகம்
EarthQuake-2023-04-03

ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியாவில் உள்ள வானாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 14 பேர்  உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரேலியா அருகே வானாட்டு தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். வானாட்டு தீவு தலைநகர் போர்ட் விலாவை மையமாக கொண்டு நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியது. மதியம் 1 மணிக்கு முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. 35 மைல் ஆழத்தில் மக்கள் வசிக்கும் 80 தீவுகளின் குழுவான வனுவாட்டுவின் மிகப்பெரிய நகரமான போர்ட் விலாவிற்கு மேற்கே 19 மைல் தொலைவில் அமைந்திருந்தது.

நிலநடுக்கம் ஏற்பட்ட 2 மணி நேரத்திற்குள் சுனாமி எச்சரிக்கை கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரிய நில அதிர்வுகள் ஏற்பட்டன. இத்தகைய நில அதிர்வால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு கார்கள் நசுக்கப்பட்டன மற்றும் பல மேற்கத்திய தூதரகங்கள் உள்ள வளாகம் உட்பட பல கட்டிடங்களை தரைமட்டமாக்கியது. நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் துண்டிக்கப்பட்டதால் சேதத்தின் முழு விவரம் தெரியவில்லை. இந்த நிலையில் இறப்பு குறித்து அதிகார பூர்வமான அறிவிப்பை பசிபிக் பிராந்தியத்தின் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டது அதில், 14 பேர் உயிரிழந்ததாகவும் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து