முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெட் விளையாடுவது சந்தேகம்?

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வந்தது.

மழையால் பாதிப்புக்கு உள்ளான இந்த ஆட்டம் இன்று டிராவில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடுவாரா? என கேள்வி எழும்பி உள்ளது. பிரிஸ்பேன் டெஸ்டில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின் போது டிராவிஸ் ஹெட்டுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மெல்போர்ன் டெஸ்டில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

____________________________________________________________________

இங்கிலாந்து வீரர் முன்னேற்றம்

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 895 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டதால் , சக வீரரான ஹாரி புரூக்கை பின்னுக்கு தள்ளி அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஹாரி புரூக் 876 புள்ளிகளுடன் 2வது இடத்தில உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்  867புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார் .

இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும் , ரிஷப் பண்ட் 9வது இடத்திலும் , சுப்மன் கில் 16வது இடத்திலும் , விராட் கோலி 20வது இடத்திலும் , ரோகித் சர்மா 30வது வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து