முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசின் விருது

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      தமிழகம்
0

Source: provided

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு மத்திய அரசின் உயரிய விருது வழங்கப்படவுள்ளது.

இந்திய ரெயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ரெயில்வே ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் தேசிய அளவில் "அதி விஷிஸ்ட் ரெயில் சேவா புரஸ்கார்" என்ற விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக இந்த ஆண்டு இந்திய அளவில் 100 சிறந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தெற்கு ரெயில்வேயை சேர்ந்த 6 ஊழியர்கள் மற்றும் 2 ரெயில்வே அதிகாரிகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை கோட்டத்தில் முதுநிலை மண்டல மின்பொறியாளர் மஞ்சுநாத் யாதவ் மற்றும் நிலைய கண்காணிப்பாளர் ஜாபர் அலி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது. டெல்லியில் வரும் 21-ந் தேதி நடைபெறும் 69-வது ரயில்வே வார விழாவில் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விருதுகளை வழங்கி பணியாளர்களை கவுரவிக்க உள்ளார்.

கடந்த 2023 -ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. டிசம்பர் 17 -ந் தேதி இரவு 800 பயணிகளுடன் செந்தூர் விரைவு ரெயில் ஸ்ரீவைகுண்டம் அருகே சென்று கொண்டிருந்தது. ரெயில் பாதை வெள்ள நீரில் மூழ்கி இருப்பதை அதிகாரியிடம் இருந்து எச்சரிக்கை தகவலை பெற்று ஸ்டேஷன் மாஸ்டர் சில நிமிடங்களில் திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினார்.

இந்த நிலையில் பயணிகள் கோபமடைந்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் விடிந்தவுடன் ரெயில் நிலையத்தின் நான்கு புறமும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் கண்டு ஆபத்து குறித்து உணர்ந்து கொண்டனர். இதையடுத்து மீட்பு படையினர் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு சென்று பயணிகளை பத்திரமாக மீட்டனர். உடனடியாக நிலைமையை புரிந்துகொண்டு செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு மத்திய அரசின் ரயில்வே துறையின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாபர் அலிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து