முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வெடுப்பதற்காக ஐதராபாத் வந்தார் ஜனாதிபதி முர்மு

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      இந்தியா
Murmu 2024-01-31

Source: provided

ஐதராபாத் : குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக ஐதராபாத்தில் உள்ள மாளிகைக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு வந்தடைந்தார். அவரை தெலங்கானா ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ஐதராபாத் அருகே உள்ள செகந்திராபாத் மாவட்டம், பொல்லாரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஓய்வெடுப்பது குடியரசுத் தலைவர்களுக்கு வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குளிர்காலத்தில் ஓய்வெடுப்பதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு விமானம் மூலம் ஐதராபாத் வந்தார்.

முன்னதாக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலுள்ள கன்னாவரம் விமான நிலையம் வந்தடைந்தார். அவரை ஆந்திர மாநில ஆளுநர் அப்துல் நஜீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட பல்வேறு அமைச்சர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் ஜனாதிபதி, தனி விமானம் மூலம் ஐதராபாத் ஹக்கீம் பேட்டையில் உள்ள விமானப்படை பயிற்சி தளத்துக்கு சென்றடைந்தார்.

பின்னர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் செகந்திராபாத் பொல்லாரத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு அவரை தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். வரும் 21-ம் தேதி வரை இங்கேயே ஓய்வெடுக்க உள்ள ஜனாதிபதி முர்மு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதி வருகையையொட்டி ஐதராபாத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து