முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விண்வெளியில் இருந்து சுனிதாவை மீட்கும் பணி மேலும் தாமதம்

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      உலகம்
Sunita-Williams 2024-05-06

Source: provided

அமெரிக்க சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட 2 விண்வெளி வீரர்களை மீட்கும் பணி மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளியிலுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணி நிமித்தமாக 8 நாள் பயணமாக சென்றனர்.

ஆனால், அந்த விண்கலத்தின் இயந்திர கோளாறு காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் இல்லாமல் விண்கலத்தை மட்டும் திரும்ப வரவழைக்க நாசா முடிவு செய்தது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இருவரையும் மீட்டு பூமிக்கு கொண்டு வர, எலன் மஸ்கின் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில் க்ரு-9 எனும் இரண்டு விண்வெளி வீரர்களுடன் கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழு கடந்த செப்டம்பர் மாதம் 2 காலி இருக்கைகளுடன் டிராகன் விண்கலத்தில் விண்வெளி மையத்தை அடைந்தது. இந்த 4 பேரும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவதாக இருந்தனர்.

அவர்கள் அப்படி திரும்ப வேண்டுமென்றால், சர்வதேச விண்வெளி மையத்தில் அவர்கள் பார்க்கும் பணியை வேறொரு குழு தொடர வேண்டும்.

இந்நிலையில், அந்த குழுவின் விண்வெளிப் பயணம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரையில் சாத்தியமில்லை என நாசா தெரிவித்துள்ளது.

இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோரின் 8 நாள் பயணம் 9 மாதத்திற்கும் மேலாக நீடிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து