முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள்: பா.ஜ.க. மீது ராகுல் தாக்கு

புதன்கிழமை, 18 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024-12-03

Source: provided

டெல்லி : பா.ஜ.க.வினர் அம்பேத்கருக்கும் அவரது கொள்கைகளுக்கும் எதிரானவர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடிவில், நேற்றுமுன்தினம் மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என்று கூறினார்.

இந்தநிலையில், அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் நேற்று அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. மேலும், அமித் ஷா பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, அமித் ஷா பேசியது அரசியலமைப்புக்கு எதிரானது. அரசியலமைப்பை மாற்றுவோம் என பா.ஜ.க.வினர் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றனர். அவர்கள்  அம்பேத்கருக்கும் அவரது கொள்கைகளுக்கும் எதிரானவர்கள். அரசியலமைப்பையும் அம்பேத்கர் செய்த பணியையும் ஒழித்துக்கட்டுவதே அவர்களின் ஒரே வேலை என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து