முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லயன்-போலன்ட் ஜோடி சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      விளையாட்டு
India-Australia 2023-11-22

Source: provided

மெல்போர்ன் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் (51 & 106 பந்துகள்) 50+ பந்துகளை சந்தித்த இரண்டாவது 10-வது விக்கெட் ஜோடி என்ற அரிய சாதனையை நாதன் லயன் - ஸ்காட் போலன்ட் நிகழ்த்தியுள்ளனர். 

333 ரன்கள் முன்னிலை... 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 105 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது. லயன் 41 ரன்களுடனும் (54 பந்துகள்), ஸ்காட் போலன்ட் 10 ரன்களுடனும் (65 பந்துகள்) களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

10-வது விக்கெட் ஜோடி... 

இதில் 10-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நாதன் லயன் - ஸ்காட் போலன்ட் ஜோடி முதல் இன்னிங்சிலும் (8.3 ஓவர்கள்) 50+ பந்துகளை சந்தித்திருந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் (51 & 106 பந்துகள்) 50+ பந்துகளை சந்தித்த இரண்டாவது 10-வது விக்கெட் ஜோடி என்ற அரிய சாதனையை நாதன் லயன் - ஸ்காட் போலன்ட் நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முன்னர் 1961-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் பாகிஸ்தானின் அபாக் ஹுசைன் - ஹசீப் அஹ்சன் (56 & 109 பந்துகள்) இந்த சாதனையை படைத்தனர். தற்போது லயன் - போலன்ட் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து