முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள, உ.பி. மகாகும்பமேளாவுக்கு அனைத்து மாநில முதல்வர்களுக்கு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2024      இந்தியா
Maha-Kumbh-Mela-2024-12-31

புதுடெல்லி, வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள, உ.பி. மகாகும்பமேளாவுக்கு அனைத்து மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகாகும்பமேளா நடக்கிறது. இந்த மகாகும்பமேளா, ஜனவரி 13-ம் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மகாகும்பமேளாவுக்கு மிக முக்கிய பிரமுகர்களை அழைப்பதற்காக உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் டெல்லி சென்றார். 

ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து அழைப்பு விடுத்தார். அவருக்கு மகாகும்பமேளாவின் இலச்சினை பொருத்தப்பட்ட அடையாளம் உள்ளிட்ட சிறப்பு பரிசுகளை வழங்கினார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா, மிசோரம் கவர்னர் வி.கே.சிங் ஆகியோருக்கும் நேரில் அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே, உத்தரபிரதேச மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா, டெல்லியில் ஒரு வாகன பேரணியில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:- மகாகும்பமேளாவில் பங்கேற்குமாறு அனைத்து மாநிலங்களின் கவர்னர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

டெல்லி முதல்வர் அதிஷியையும் சந்தித்து அழைப்பு விடுப்போம். மகாகும்பமேளாவில் பக்தர்களை ஒழுங்குபடுத்த நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதற்கு 3 முறைகள் பயன்படுத்தப்படும். ஒரு முறையில், கேமராக்கள் உதவியுடன் பக்தர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். 2-வது முறைப்படி, பக்தர்கள் கை மணிக்கட்டில் ரேடியோ அதிர்வெண் அடையாள பட்டை அணிவிக்கப்படும். அதன் உதவியால், பக்தர்கள் உள்ளே நுழையும் நேரம் மற்றும் வெளியேறும் நேரம் கண்காணிக்கப்படும்.

3-வது முறைப்படி, பக்தர்களின் சம்மதத்துடன், மொபைல் செயலியை பயன்படுத்தி, ஜி.பி.எஸ். மூலம் பக்தர்களின் இருப்பிடம் கண்காணிக்கப்படும். மகாகும்பமேளாவுக்கென தனி இணையதளம், செயலி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் 11 மொழிகளில் சாட்பாட், கியூஆர் கோடு அடிப்படையிலான அனுமதி அட்டைகள், டிரோன் மூலம் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, கூகுள் வரைபடத்தில் அனைத்து இடங்களும் ஒருங்கிணைப்பு, பல மொழிகளில் டிஜிட்டல் வழிகாட்டி பலகைகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொலைந்துபோன பக்தர்களை கண்டுபிடித்து மீட்க பல மொழிகள் கொண்ட கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 101 ஸ்மார்ட் வாகன நிறுத்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு தினந்தோறும் 5 லட்சம் வாகனங்களை நிறுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து