முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 203 சுடுகாடுகளில் குப்பைகள் - செடிகள் அகற்றம்

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      தமிழகம்
chennai-corporation 2025-01-03

Source: provided

சென்னை: சென்னையில் 203 சுடுகாடுகளில் மாநகராட்சி ஊழியர்களால் குப்பைகள் - செடிகள் அகற்றப்பட்டன.

சென்னை மாநகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. சாலைகள், பஸ்நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், நிழற் கூடங்களில் குப்பைகள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததை அகற்றி வருகிறார்கள். கடந்த 30-ந்தேதி சென்னையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற் கூடங்களை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 203 சுடுகாடுகளில் தீவிர தூய் மைப்பணி நேற்று காலை 6 மணியில் இருந்து 8 மணி வரை நடந்தது. சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் மண்டி கிடந்த முட்புதர்கள், செடிகள், குப்பைகள், கட்டிட கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அகற்றினார்கள். 15 மண்டலத்திற்கு உட்பட்ட சுடுகாடுகளில் மாநகராட்சி மண்டல அலுவலர்கள் தலைமையில் தூய்மை பணி நடந்தது.

திருவொற்றியூர் நவீன எரியூட்டும் மயான பூமி, ஈஞ்சம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மயிலாப்பூர், ஆலப்பாக்கம், புழல், எண்ணூர், சாந்தி நகர், நெசப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் உள்ள சுடுகாடுகளில் குப்பைகளை அகற்றினார்கள். பொதுவாக மயானங்களில் தூய்மைப் பணி நீண்ட காலமாக செய்யாததால் குப்பைகள், சடங்குகள் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட கழிவுகள் ஆங்காங்கே கிடந்தன. அவற்றை சேகரித்து லாரிகளில் ஏற்றினர். மரம், செடி களின் இலைகள் உதிர்ந்து குப்பைகளாக காட்சியளித்தன. அவையெல்லாம் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து