முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: அ.தி.மு.க. சார்பில் மரியாதை

வெள்ளிக்கிழமை, 3 ஜனவரி 2025      தமிழகம்
admk 2025-01-03

Source: provided

மதுரை: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க.  சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை ஒட்டி அ.தி.மு.க. சார்பில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின்  உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோரும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை ஒட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், தெற்குச் சீமையில் தாய் மண்ணைக் காப்பதற்காக, ஏகாதிபத்திய ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து போரிட்டு, உயிரை துச்சமெனத் துறந்து, தியாகம் செய்து, வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும், உன்னத தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து