முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் இருந்து டெல்லியில் அயர்ன் பாக்சில் மறைத்து கொண்டு வரப்பட்ட தங்கம் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2025      இந்தியா
Gold 2024-08-26

Source: provided

புதுடில்லி : சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து டில்லிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆண் பயணி கொண்டு வந்த உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மெட்டல் டிடெக்டர் மூலம் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. பிறகு எக்ஸ்ரே மூலம் நடந்த சோதனையில் சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் அவரது உடமைகளை பிரித்து சோதனை செய்யப்பட்டது. அதில், எலெக்ட்ரிக் அயர்ன் பாக்சில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதன் மதிப்பு ரூ.46.80 லட்சம் ஆகும்

அதேபோல், நேற்று முன்தினம் சவுதியின் ஜெட்டா நகரில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணித்த ஆண் பயணியின் உடைமைகள், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டன. எக்ஸ்ரே மூலம் நடந்த சோதனையில் அவர் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பையில் மறைத்து 379 கிராம் எடை கொண்ட 24 காரட் தங்கம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து