முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் பெண்களுக்கு நிதியுதவி: பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      இந்தியா
AAP 2024-10-08

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவியாக ரூ.2,500 வழங்கப்படும் என பா.ஜ.க. அறிவித்தது குறித்து ஆம் ஆத்மி கட்சி  குற்றச்சாட்டியுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல் வருகிற 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டு,  8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா காக்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, டெல்லியில் நலத்திட்டங்கள் தொடரும் என பா.ஜ.க.வினர் அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

கெஜ்ரிவாலின் திட்டங்களை அவர்கள் தத்தெடுத்திருக்கின்றனர் என்றால், பிரதமர் மோடி இன்னும் எங்களுடைய திட்டங்களை இலவசங்கள் என பொய் கூறி வருகிறாரா? நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்ட பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடியின் ஒப்புதல் இருக்கின்றதா? என்று அவர் கேட்டுள்ளார்.

இதற்கு பா.ஜ.க.வின் தேசிய தலைவர் மற்றும் மத்திய மந்திரியான ஜே.பி. நட்டா, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் அறிவித்தது அதில், பெண்களுக்கான நலத்திட்டங்கள், மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், டெல்லி பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவியாக ரூ.2,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நட்டா பேசும்போது, 2021-ம் ஆண்டில், மாதம் ஒன்றிற்கு ரூ.2,100 வழங்கப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்தது. ஆனால், டெல்லியிலோ, பஞ்சாப்பிலோ அவர்கள் அதனை வழங்கவில்லை. 2024-ம் ஆண்டில் மாதத்திற்கு ரூ.1,000 வழங்குவோம் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால், எதிர்பார்த்தது போன்றே வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம் வழங்குவதிலும் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து விட்டது என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து