முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதிப்புத்துறையில் புதுமை புரிந்தவர்களுக்கு விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      தமிழகம்
CM-1 2025-01-17

Source: provided

சென்னை : சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பின்னர் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்புத்துறையில் புதுமை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.1.2025) சென்னை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2025 நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கான மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை வெளியிட்டார்.

மேலும், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது, உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தகக் கண்காட்சி சிறப்பு விருது, பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது, பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது, புத்தக ஊக்குவிப்பு விருது, உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருது ஆகிய விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

உலகைத் தமிழுக்கும்; தமிழை உலகுக்கும் என்ற உயரிய நோக்கத்தோடு கொண்டாடப்படும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில், 2023-ஆம் ஆண்டு 24 நாடுகள் பங்குபெற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2024-ஆம் ஆண்டு 40 நாடுகள் பங்குபெற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுதோறும் ஏற்றமிகு வளர்ச்சியினைக் கண்டு வரும் சென்னை பன்னாட்டுப் புத்தகத்  திருவிழா இந்த ஆண்டு, சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் 16.1.2025 முதல் 18.1.2025 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்த ஆண்டு 60-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பதிப்புலக ஆளுமைகள் இப்புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியா, பெனின், புரூனே, பல்கேரியா, சிலி, சைப்ரஸ், எஸ்தோனியா, எத்தியோப்பியா, கானா, ஐவரி கோஸ்ட், ஜப்பான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லக்ஸம்பர்க், மடகாஸ்கர், மொரிசியஸ், மெக்சிகோ, மங்கோலியா, மொராக்கோ, மொசாம்பிக், நேபாளம், நைஜீரியா, நார்வே, தைவான், ருமேனியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, இலங்கை, டோகோ, உக்ரைன், அமெரிக்க ஐக்கிய நாடுகள், உஸ்பெகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய 34 நாடுகள் முதல்முறையாக பங்கேற்றுள்ளன.

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இப்புத்தகத் திருவிழாவில், 78 அரங்கங்கள், குழந்தைகளுக்காக 3 சிறப்பு அரங்கங்கள் என 60 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. உலகெங்கும் நம் இலக்கியங்களை எடுத்துச்சென்று, தமிழ் மொழியின் சிறப்பினை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு மொழிபெயர்ப்பு மானியமாக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. இதன்மூலம், கடந்த இரண்டாண்டுகளில், 166 தமிழ் நூல்கள் 32 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவதற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு புகழ்பெற்ற பன்னாட்டுப் பதிப்பகங்களான ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ், பென்குயின் ரேண்டம் ஹவுஸ், ஹார்ப்பர் ஹாலின்ஸ், ஹெஷட், ரௌட்லட்ஜ், ப்ளூம்ஸ்பெர்ரி போன்றவற்றுடன் இணைந்து பல்வேறு கூட்டு வெளியீடுகளை குறிப்பாக தமிழ் இலக்கியங்களை - தமிழ்நாட்டு வரலாற்றை- தமிழர் பண்பாட்டை ஆங்கில மொழி மொழிபெயர்ப்புகள் வாயிலாக உலகெங்கும் கொண்டுசேர்க்கும் பணியினை சிறப்பாகச் செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கான மொழிபெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை முதல்வர் வெளியிட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதில் தமிழ்மொழியிலிருந்து அயலக மொழிகளுக்கு 1,005 ஒப்பந்தங்களும் அயலக மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. குறிப்பாக அரபி மொழிக்கு 33 ஒப்பந்தங்களும், பிரெஞ்ச் மொழிக்கு 32 ஒப்பந்தங்களும், மலாய் மொழிக்கு 28 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

மேலும், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் முதல்வர், சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது மற்றும் உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தகக் கண்காட்சி சிறப்பு விருதை ரியாத் புத்தக கண்காட்சிக்கும், பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதினை தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா மற்றும் பேராசிரியர் டாக்டர் அருள்சிவன் ராஜு ஆகியோருக்கும், நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதினை கிறிஸ்டியன் வியிஸ் மற்றும் கே.எஸ். வெங்கடாசலம் ஆகியோருக்கும், கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருதினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகத்திற்கும், பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருதினை துருக்கி நாட்டின் டி.இ.டி.ஏ. -விற்கும், புத்தக ஊக்குவிப்பு விருதினை மங்கோலியா மேஜிக் பாக்ஸ் மற்றும் இத்தாலி நாட்டின் கியூண்டி ஓடியன் புத்தக விற்பனை நிலையத்திற்கும், உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருதினை பொலானா குழந்தைகள் புத்தகக் கண்காட்சிக்கும் வழங்கி சிறப்பித்தார்.

இந்த விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, மத்திய முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர்கள், அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் ஹிடோஸி ப்ருக்ஸ்மா, இத்தாலி பொலோனியா புக் ப்ளஸ் இயக்குநர் ஜாக்ஸ் தாமஸ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிடட் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து