முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகள் : பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

புதுடெல்லி : பிரதமா் மோடி நேற்று ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களில் 65 லட்சம் சொத்து அட்டைகளை காணொலி வாயிலாக வழங்கினார். 

கிராமிய கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் வரைபடங்கள் தயாரித்தல் (ஸ்வமித்வா) திட்டத்தின்கீழ் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தால் செயல் படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் கிராமியப் பகுதிகளில் உள்ள நிலங்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு சட்டபூா்வமாக சொத்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.

கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் தொலைநோக்குடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கிக் கடன்கள் பெற்று அதன் மூலம் நிதி நிறுவன கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளைக் குறைப்பதற்கும், கிராமப் புறங்களில் சொத்துகள் மற்றும் சொத்து வரியை சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும் கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது

இந்த நிலையில் பிரதமா் மோடி நேற்று ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களில் 65 லட்சம் சொத்து அட்டைகளை காணொலி வாயிலாக வழங்கினார். அவா் திட்டப் பயனாளிகள் சிலரிடமும் கலந்துரையாடினார். குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களில் 50,000 கிராமங்களைச் சோ்ந்த நில உரிமையாளா்களுக்கு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டது.

3.17 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்களில் ஆளில்லா விமானம் மூலம் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத இலக்கு எட்டப்பட்டது. இதுவரை 1.53 லட்சம் கிராமங்களுக்கு 2.24 கோடி சொத்து அட்டைகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. 2026-ல் இந்த இலக்கு முழுமையாக முடிவடையும்.

புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர், திரிபுரா, கோவா, உத்தரகாண்ட், அரியானா ஆகியவற்றில் இந்தத் திட்டம் முழு வளர்ச்சியை எட்டி உள்ளது. இத்திட்டத்தில் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன. சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் திட்டத்தின் சோதனை கட்டத்தில் மட்டும் பங்கேற்றன. மேற்கு வங்கம், பீகார் நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் இணையவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து