எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ம் தேதி அதிகாலையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். மாநில போலீசார் அவரை கைது செய்தனர்.
எனினும் இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்டு 13-ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 14-ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினர். மறுபுறம் இந்த விவகாரத்தில், தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டும், ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்புக்குழு ஒன்றை நியமித்தது.
பணியில் இருந்த பெண் டாக்டர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் என பல நாட்கள் போராட்டம் நீடித்தது.
பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் மேற்கு வங்காளத்தில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு சீல்டா மாவட்ட கூடுதல் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ம் தேதி நிறைவடைந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் போல நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சியல்டா கோர்ட் வழங்கும் தீர்ப்புக்காக நாடே எதிர்பார்த்திருந்தது.
இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து கோர்ட்டின் வாசல் கதவை தட்டுவோம் என கூறியுள்ள பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில், மரபணு பரிசோதனை அறிக்கையில், ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறார் என குறிப்பிடப்படவில்லை. சம்பவத்தின்போது, 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால், நாங்கள் சற்று ஆறுதலாக உணர்வோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, நாங்கள் தொடர்ந்து கோர்ட்டின் கதவை தட்டுவோம். நாட்டு மக்களின் ஆதரவையும் நாங்கள் கோருவோம் என்று கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர். நீதிபதி அனிர்பன் தாஸ் தனது தீர்ப்பில், சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பிஎன்எஸ் பிரிவுகள் 64, 66 மற்றும் 103(1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி. இதற்கு அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் இருக்கும் என்று அறிவித்தார். குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் நாளை (20-ம் தேதி) அறிவிக்கப்படும் என்று கோர்ட் தெரிவித்துள்ளது.
அப்போது, “நான் இதைச் செய்யவில்லை. இதைச் செய்தவர்கள், ஏன் கைது செய்யப்படவில்லை?” என்று சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் கூறினார். அக்டோபர் 7, 2024 அன்று இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சீல்டாவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணையை நடத்தியது. விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. ஒரே குற்றவாளி சஞ்சய் ராய் என்று சி.பி.ஐ. ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி : மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
18 Jan 2025கொல்கத்தா : நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி
-
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அரிப்பு: தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு
18 Jan 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஏற்பட்ட கடல் அரிப்பை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தனர்.
-
மத்திய பாரதிய ஜனதா அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து : துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு
18 Jan 2025சென்னை : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகள் : பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்
18 Jan 2025புதுடெல்லி : பிரதமா் மோடி நேற்று ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களில் 65 லட்சம் சொத்து அட்டைகளை காணொலி வாயிலாக வழங்கினார்.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு
18 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., நா.த.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
-
நோபல் பரிசு வெல்வதை இலக்காக கொள்ள வேண்டும் : தமிழ் எழுத்தாளர்களுக்கு முதல்வர் கோரிக்கை
18 Jan 2025சென்னை : தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள், ஞானபீட விருது மட்டுமின்றி நோபல் பரிசு வெல்வதையும் இலக்காக கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பதிப்புத்துறையில் புதுமை புரிந்தவர்களுக்கு விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
18 Jan 2025சென்னை : சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.
-
பொங்கல் பரிசு தொகுப்பு பெற காலக்கெடு நிறைவு
18 Jan 2025சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பை பெற நேற்று மாலையுடன் காலக்கெடு நிறைவடைந்தது.
-
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய படம் வெளியீடு
18 Jan 2025மும்பை : நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: இஸ்ரேல் நாட்டு பிணை கைதிகளை இன்று முதல் விடுவிக்கிறது ஹமாஸ்
18 Jan 2025டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்: ஐ.எம்.எப்.
18 Jan 2025வாஷிங்டன் : 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நாணய நிதியம
-
நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம் : அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Jan 2025பெங்களூரு : நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரின் ரூ.300 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
-
டெல்லியில் பெண்களுக்கு நிதியுதவி: பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
18 Jan 2025புதுடெல்லி : டெல்லியில் பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவியாக ரூ.2,500 வழங்கப்படும் என பா.ஜ.க. அறிவித்தது குறித்து ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-01-2025.
18 Jan 2025 -
தி.மு.க.வுக்கு வரும் ஆபத்தை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும் : தி.மு.க. சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
18 Jan 2025சென்னை : தி.மு.க.வுக்கு வரும் ஆபத்தை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும் என்று தி.மு.க. 3-வது சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
-
ஓஹியோ மாகாண ஆளுநர் பதவி: விவேக் ராமசுவாமி போட்டி
18 Jan 2025வாஷிங்டன் : இந்திய அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு
18 Jan 2025சென்னை : தங்கம் சவரனுக்கு விரை ரூ.120 குறைந்து விற்பனையானது.
-
உ.பி. மகா கும்பமேளாவில் புனித நீராடினார் ராஜ்நாத் சிங்
18 Jan 2025லக்னோ : உ.பி. மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
-
குமரி மாணவர் கொலை வழக்கில் குற்றவாளியான காதலிக்கு நாளை தண்டனை அறிவிப்பு
18 Jan 2025திருவனந்தபுரம் : குமரி மாணவர் கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட காதலி கிரீஷ்மாவுக்கு நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
-
மதுரை மற்றும் திருச்சியில் டைடல் அமைக்க பூங்கா சுற்றுச்சூழல் அனுமதி
18 Jan 2025சென்னை : மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
உத்தரகாண்ட் மாநிலத்தில் சோகம்: குளிருக்கு மூட்டிய நெருப்பில் கணவன்- மனைவி உயிரிழப்பு
18 Jan 2025டேராடூன் : குளிருக்கு மூட்டிய நெருப்பில் மூச்சுத்திணறி கணவன்- மனைவி இருவரும் உயிரிழந்து உள்ளனர்.
-
பரந்தூரில் போராட்டக்குழுவை சந்திக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு காவல்துறை கட்டுப்பாடு
18 Jan 2025சென்னை : பரந்தூரில் போராட்ட குழுவை சந்திக்கும் த.வெ.க.தலைவர் விஜய்க்கு கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை காவல்துறை விதி
-
புதிதாக 12,000 பேருக்கு வேலை: விப்ரோ நிறுவனம் அறிவிப்பு
18 Jan 2025மும்பை : 2025-26 நிதியாண்டில் புதிதாக 12,000 பேரை பணியில் சேர்க்கவிருப்பதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
18 Jan 2025சென்னை : தமிழகத்தில் குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று இரவு வரை மட்டுமே அனுமதி
18 Jan 2025சபரிமலை : சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு இன்று மாலை வரை மட்டுமே பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.